சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 8 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.