சென்னை
அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாகக் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.