டில்லி:
மெட்ரோ ரெயில் நிலையங்களின் உள்ளது போல் பார் கோடு ஸ்கேனர் கருவிகளுடன் கூடிய தானியங்கி டிக்கெட் பரிசோதனை நுழைவு வாயில்களை ஏற்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் மீதான அழுத்தத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டதுள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே கொல்கத்தா மற்றும் டில்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட் டுள்ளது. மெட்ரோபாலிட்டன் அல்லாத நகரங்களில் போக்குவரத்த குறைவாக உள்ள ரெயில்நிலையங்களில் இது அமல்படுத்தப்படவுள்ளது.
முதல் கட்டமாக டில்லி கோட்டம் ப்ரார் ஸ்கொயர் ரெயில்நிலையத்தில் பரிட்சாத்திர முறையில் இந்த தானியங்கி திட்டத்தை அமல்படுத்த ரெயில்வேயின் சாப்ட்வேர் அமைப்பான சிஆர்ஐஎஸ் பணியாற்றி வருகிறது. இங்கு அடுத்த 3 மாதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது வெற்றி பெற்றால் ரெயில்வேன் டிக்கெட் பரிசோதகர்களுக்கான பற்றாகுறைக்கு தீர்வாக அமையும்.
இந்த ரெயில்நிலையங்களில் வழங்கப்படும் முன் பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்களில் க்யூஆர் கோடு அ ச்சடிக்கப்படும். இந்த பார் கோடு கொண்ட டிக்கெட் இருந்தால் தான் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறவோ, உள்ளே நுழையவோ முடியும். இதன் மூலம் கூட்ட நேரங்களில் பயணிகள் விரைந்து வெளியேறுவதோ, உள்ளே செல்வதோ சாத்தியமாகும்.
இந்த முறை கொல்கத்தா மற்றும் டில்லி மெட்ரோ ரெயில்நிலையங்களில் அமல்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது. ஆனால் இது வரை இதர ரெயில் நிலையங்களில் இதை முயற்சிக்கவில்லை. ஆனால் மெட்ரோ ரெயில்நிலையங்கள் தரை தளத்தில் அமைந்துள்ளது. அதே சமயம் ரெயில்நிலையங்களில் காம்பவுண்டு சுவர் கூட இருக்காது.
இதற்கு ஏற்ப ப்ரார் ஸ்கொயர் ரெயில் நிலையத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப பார் கோடு டிக்கெட்கள் வழங்க தெர்மல் பிரிண்டர்கள் ரெயில்நிலையத்தில் நிறுவப்படவுள்ளது.