டில்லி:
ஐரோப்பா ரெயில் கட்டுப்பாட்டு முறை அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கும் திட்டம் உள்ளது என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்திய ரெயில்வேயை பாதுகாப்பானதாக மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக ரெயில்வேயில் மிக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல் நாடு முழுவதும் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது.
இந்த ஐரோப்பா ரெயில் கட்டுப்பாட்டு முறையில் மொத்தம் 1.18 லட்சம் கி,மீ. ரெயில்வே பாதை அடங்கும். உலகம் முழுவதும் 20 ஆயிரம் கி.மீ., தூரம் தான் இத்தகைய நவீன தொழில்நுட்ப சிக்னல் உள்ளது. இதை விட 6 மடங்கு அதிகமாக அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘ஒட்மொத்த ரெயில் பாதைகளும் வைஃபை மூலம் இணைக்கப்படும். இதனால் ரெயில் நிலையங்கள், உள்ளூர் மக்கள் பயனடைவார்கள். நாட்டிற்கு என்ன அவசிய தேவையோ? அதை ஒவ்வொரு நாடும் செய்தாக வேண்டும்’’ என்றார்.