டில்லி,

ரெயில்வேயில், விளம்பர ஒப்பந்தங்கள் அளித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பொது கணக்கு குழு தகவல் தெரிவித்து உள்ளது.

ரெயில்வே குறித்த கணக்குகளை தணிக்கை செய்துவந்த கே.வி.தாமஸ் தலைமையிலான குழு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுகணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ரெயில்வேக்களில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதில், வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், மத்திய, மேற்கு ரெயில்வேக்களின் அங்கமான, மும்பை பிரிவில், ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற வகையில் விளம்பர ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறை சுமார் 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்துள்ளது.  எனவே, இந்த நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்,

விளம்பர ஒப்பந்தங்கள் வழங்குவதில், ரயில்வே அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள்  அவர்களுக்கு எதிராக, மத்திய புலனாய்வு கமிஷன் விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.