கழிப்பறைக்கு சமாஜ்வாதி கட்சியின் கொடி வண்ணத்தில்  ’’டைல்ஸ்’’ பதித்த ரயில்வே..

நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, எதிர்க் கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின் வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

இப்போது  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறையும் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ரயில்வேத்துறைக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது.

இதன் கழிப்பறைக்கு சமாஜ்வாதி கட்சியின் கொடி வண்ணமான சிவப்பு –பச்சை வண்ணத்தில் ‘டைல்ஸ்’ பதித்து அந்த கட்சியினரின் கோபத்தை ரயில்வே துறை வாங்கி கட்டிக்கொண்டுள்ளது.

‘’கழிப்பறையின் வண்ணத்தைக் கருப்பு மையால் அழிக்கப் புறப்பட்டனர், சமாஜ்வாதி கட்சியினர்.

‘’கழிப்பறைக்கு எங்கள் கட்சியின் கொடி வண்ணத்தில் ‘டைல்ஸ்’’ பதித்ததன் மூலம்  பா.ஜ.க அரசு. எங்களைக் களங்கப்படுத்தியுள்ளது’’ என எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சி இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலுக்கு புகார் கடிதமும் அனுப்பினர்.

இதையடுத்து கழிப்பறைக்கு இப்போது வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.