டில்லி:

இந்திய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பாது கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ஒரு மணி நேரத்திற்கு 600 கி.மீ. என்று ரெயில்களின் வேகத்தை அதிகரித்து, இந்திய ரெயில்வே துறையை அடுத்த கட்டத்தை நோக்கி அழைத்துச் செல்ல சர்வதேச தொழில்நுடப் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பரபரப்பான டெல்லி&மும்பை, டெல்லி&கொல்கத்தா இடையிலான கேதிமன் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரூ. 18 ஆயிரம் கோடியை நிதிஆயோக் ரெயில்வே துறைக்கு வழங்கியுள்ளது.

கடந்த 6 முதல் 8 மாதங்களாக ரெயில்களின் வேகத்தை மணிக்கு 600 கி.மீ. மேல் அதிகரிக்க பெரிய தெ £ழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘இதன் மூலம் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வது மட்டும் நோக்கமல்ல. இந்தியாவும் இணைந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தும். பாதுகாப்பு என்பது முக்கிய காரணியாக உள்ளது.

அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்துடன் ரெயில் தண்டவாள விரிசல்களை தானியங்கி முறையில் கண்டறியும் வகையிலான ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார் சுரேஷ் பாபு.