டில்லி

ரெயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் 72 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.

அகில இந்திய ரெயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பினர் 7வது ஊதிய கமிஷனை அமுல்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாருக்கு விற்கக் கூடாது, தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.  இந்த கூட்டமைப்பின் பிரதிநிகளுடன் மத்திய ரெயில்வே அமைச்சகமும் நிதி அமைச்சகமும் பேச்சு வார்த்தைகள் நடத்தின.

பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை.   அதனால் ரெயில்வே ஊழியர்கள்  இன்று முதல் 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.   இந்த போராட்டத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், பாதுகாப்பாளர்கள் சங்கம்,  ஓட்டுனர்கள் சங்கம், மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகள் சங்கம ஆகிய 4 சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றால் பயணிகளுக்கு பெரும் சிரமம் உண்டாகும் என ரெயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.   அதனால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.