சென்னை:

சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையின்போது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே.நகர் மேற்கு  வட்டார போக்குவரத்து அலுவலகம் கே.கே.நகரில் உள்ளது. இந்த போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின்போது, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றி எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.