சென்னை,

தமிழகம் முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணம் வைத்திருப்ப வர்களை வேட்டையாடி வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் உள்பட பட இடங்களில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிரபல நகைக்கடைகளிலும் சோதனை நடைபெற்றது.

இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு உள்பட 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

வருமான வரித்துறை ரெய்டு நடைபெறும் நிறுவனங்கள்:

ETA குழுமம் சென்னை மற்றும் ஐதராபாத், தூத்துக்குடி, மதுரை, கீழக்கரை, மும்பை, கொல்கத்தா, டெல்லி

புகாரி குழுமம்

ஐ-பவர்

கிரசன்ட் என்ஜினியரிங் காலேஜ்,

வோல்ஸ் வேகான் கார் கம்பெனி, சென்னை,

சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் வீடு மற்றும் அலுவலகம்,

உள்பட  70 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]