டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று பேசிய ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வலதுசாரி குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் மற்றும் டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் அவரது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது முதல் உரையில், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் “வன்முறையிலும் வெறுப்பிலும்” ஈடுபடுகிறார்கள் என்று பா.ஜ.கவைக் கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ராகுலின், பா.ஜ.க, இந்து மதம் பற்றிய கருத்துகள், நரேந்திர மோடி அரசாங்கத்தில் காங்கிரஸ் அடிக்கடி குறிப்பிடும் சில முக்கிய தொழிலதிபர்கள் பற்றிய கருத்துகள், அக்னிபாத் திட்டம், நீட் விவகாரம், மணிப்பூர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ராகுல் பேசிய கருத்துகள் நாடாளுமன்றக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ராகுலின் மவுனம் கலைந்து விட்டதாக அவர்மீத குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக இந்து அமைப்புகள் அவர்மீது கோபமான உள்ளன. இதனால், அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பலர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். மேலும் பல பகுதிகளில் இந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் உயிருக்கு அச்சுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் வலதுசாரி குழுக்களிடமிருந்து வந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துஉள்ளது. பிற்பகல் வேளையில் அப்பகுதியில் பதற்றம் ஏற்படக்கூடும் என கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .
ராகுல் காந்தி இந்துக்களை விமர்சிக்கவில்லை; பாஜக தலைவர்களைதான் விமர்சித்தார்! பிரியங்கா வத்ரா…