டில்லி:
இந்தியாவுக்கான சீன தூதரை சந்தித்தது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கான சீன தூதரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இந்தியா – சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் இந்த சந்திப்பு குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பூடான் தூதர் ஆகியோரை சந்தித்து பேசினேன். நாட்டின் சிக்கலான சூழ்நிலை குறித்து எடுத்துரைப்பது எனது கடமை” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்திய எல்லையில் சீன துருப்புகள் நுழைவதைக் கண்டு அமைதியாக இருக்க இயலாது. சீன தூதர் பற்றி கேள்வி எழுப்பும் மத்திய அரசு, மூன்று அமைச்சர்கள் சீனா சென்றது பற்றி விளக்கம் அளிக்காதது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இரு தினங்களுக்கு முன், “சீன விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்” என்று ராகுல்காந்தி டிவிட் செய்திருதது குறிப்பிடத்தக்கது.