பெங்களூரூ:

ர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்தி, இன்றைய பிரசாரத்தின்போது இடையே அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நாளையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறருது. இதன் காரணமாக அங்கு கடைசி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், இன்று காலையில் சாலை மார்க்கமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி, பசவனகுடியில் உள்ள டோடா கணபதி கோயிலில்  வழிபாடு செய்தார்.

இதனையடுத்து தற்போது பசவனகுடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு பொதுமக்கள் திரளாக வந்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கிருஷ்ணநகர் தொழிற்பேட்டை பகுதி மற்றும் சிவாஜிநகர், திப்பசந்ரா மெயின் ரோடு, ஹெப்பால் போன்ற இடங்களில் இன்று ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதவேளையில், பிரதமர் மோடி, கர்நாடகாவின் பங்காருபேட்டை, சிங்மங்களூரு, பெலகாவி, பிதர் மாவட்ட பகுதிகளில் பிரசாரம் செய்துவருகிறார்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உ.பி. முதல் யோகி ஆதிய்நாத்தும், ஹுப்ளி, ரத்திஹள்ளி,சகாங்கர் நகர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

முக்கிய பிரபலங்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.