புதுடெல்லி: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு பின்புலமுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் ராகுல் காந்தி.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் என்ற செய்தி வெளியானவுடன், அவருக்கு டிவிட்டரில்  வாழ்த்து சொன்னார் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், துணை அதிபராக தேர்வாகியுள்ள முதல் பெண்மணியாகிய, தமிழ்நாட்டு பின்புலம் கொண்ட கமலா ஹாரிஸையும் வாழ்த்தியுள்ளார் ராகுல் காந்தி.

“துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்! அமெரிக்காவின் முதல் பெண் துணை குடியரசுத் தலைவராக பணியாற்றவுள்ள ஒருவர், இந்தியப் பூர்வீகம் கலந்தவர் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை!” என்றுள்ளார் ராகுல் காந்தி.