சென்னை:
பாதயாத்திரை துவங்குவதற்கு முன்பு, ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னை வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, 150 நாட்கள், 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரையை ராகுல் மேற்கொள்கிறார். தமிழகத்தில் நான்கு நாட்கள், அவர் பாத யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின், அழகிரி அளித்த பேட்டியில், செப்டம்பர் 7-ஆம் தேதி காலை ராகுல் சென்னை வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். மாலையில், கன்னியாகுமரியில் பாத யாத்திரையை துவங்குகிறார். இதில் பங்கேற்க, தி.மு.க.., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.