டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தாம் மாணவர்கள் குரலாக ஒலிப்பேன் என்று தெரிவித்துள்ளார்/

நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  \

அவரகள் தங்கள் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு,  இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்..

ஏற்லமவே நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஆனால்  நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்ததது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்

“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்.  நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பே நீர் தேர்வு மோசடிகள் வெளி வந்துவிட்டன.  நீட் வினாத்தாள் வெளியான புகாரை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.  நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.  மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்.  I.N.D.I.A. கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் குரலை ஒடுக்க I.N.D.I.A. கூட்டணி அனுமதிக்காது”

என்று பதிவிட்டுள்ளார்.