டில்லி,
பிரதமர் மோடியை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார்.
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்து பேசிய ராகுல் காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், எனவே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தி யுள்ளார்.
மேலும் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel