டெல்லி

ன்று காமராஜரின் 122 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இன்று காமராஜரின் 122 ஆவது பிறந்தநாள் நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காமராஜருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,

“அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பாரத ரத்னா காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள்.

காமராஜர் உண்மையான தேசபக்தர் மற்றும் வெகுஜனத் தலைவர். அவர் அயராது உழைத்து நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவது மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்.”

என்றுபதிவிட்டுள்ளார்.