டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கூ கடிதம் எழுதி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில்

”மக்களிடம் ஆலோசனை கேட்காமலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தாமலும் ஆழ்கடல் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அதில் சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிடாமல் சுரங்கத்திற்கான டெண்டர்கள் அழைப்பதற்கு கடலோர சமூகங்கள் எஅட்திர்ப்பு தெரிவிட்த்டுள்ளேன்

என்று குறிப்பிட்டுள்ளார்.