ஜெய்ப்பூர்

ராகுல் காந்தியின் நியாய் யாத்திரை ராஜஸ்தானுகுள் வந்துள்ளது.

கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையில் அவர் 66 நாட்களில் 15 மாநிலங்களைக் கடந்து மும்பையில் யாத்திரையை முடிக்கத்  திட்டமிட்டுள்ளார்.

ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை பல்வேறு மாநிலங்களைக் கடத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்தது. நேற்று உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தில் நிறைவடைந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரை ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று அங்கிருந்து குஜராத், மத்தியப்பிரதேசம் வழியாக இறுதியில் மகாராஷ்டிர மாநிலம் சென்றடைய உள்ளது.