ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதுஉச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, மனு தொடர்பாக, குஜராத் அரசு மற்றும் ராகுல்மீத அவதூறு வழங்கு தொடர்ந்த புகார்தாரரும் குஜராத் பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது
இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.