டில்லி

க்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் அளிக்கும் ராகுல் காந்தியின் திட்டம் நடக்ககூடியது தான் என ரகுராம் ராஜன் உறுதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ரூ.6000 மாத வருமானம் கிடைக்க வழி செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என அவர் கடந்த 25 ஆம் தேதி தெரிவித்தார். இதற்கு மக்களிடையே மிகவும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாஜகவினர் இது நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

நியாய் என இந்தியில் பெயர் சூட்டப்பட்ட இந்த திட்டம் (தமிழில் நீதி என பொருள்) நடக்கக் கூடியதா என செய்தியாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் கேள்விகள் எழுப்பினர். ரகுராம் ராஜன், “காங்கிரசின் இந்த நியாய் திட்டம் என்பது ஏழை மக்களுக்கு நிரந்தரமாக வருடத்துக்கு ரூ.72000 ஊதியம் கிடைக்க வகை செய்யும் திட்டமாகும். இந்த திட்ட ம் அடித்தட்டு மக்கள் தங்கள் ஊதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்த வகை செய்யும்.

தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நிலையில் இது நடக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இது நடக்கக் கூடிய ஒன்று தான். அதற்கான ஒரு சில நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டால் இந்த திட்டம் வெற்றி அடையும். தற்போதைய நிலையில் மேலும் ரூ.7 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க முடியுமா என்றால் முடியாது எனத்தான் கூற முடியும்.

அதனால் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அரசு மேற்கொண்டு இந்த திட்டத்தின் மூலம் பணிகள் செவ்வனே நடைபெற ஏற்பாடுகள் செய்வது முதன்மையாகும். அவைகளை சரியாக செய்தால் இந்த திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்கள் மிகவும் பயனடைவார்கள்.” என தெரிவித்துள்ளார்.