டில்லி:
டில்லி பவானா தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பவானா தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தில் இருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]