ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் : சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார்.

Must read

லிஃபோர்னியா

ராகுல் காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் ஒரு பகுதியாக மின்சார கார் தயாரிக்கும் தெஸ்லா நிறுவனத்தின் சூரிய மின்சார நிலையத்தை பார்வையிட்டார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு அவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்.  அந்த வரிசையில் தற்போது அவர் மின்சாரக் கார்கள் தயாரிக்கும் நிறுவனமான தெஸ்லா தொழிற்சாலைக்கு சென்றார்.  அங்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டார்.

தற்போது இந்தியா முழுவதும் மாற்றுச் சுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கும் முறை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   அந்த முறையில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதும் ஒன்றாகும்.   இந்தியாவில் எல்லா காலங்களிலும் சூரிய ஒளி கிடைப்பதால், இது நல்லதொரு முறை என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் மின்சாரக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பார்வை இட்டார். தற்போது இந்தியாவில் மின்சாரக் கார்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.   மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது தெரிந்ததே.

அதன் பின் ராகுல் காந்தி லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு சென்றார்.  அங்கு அவர் உள்ளூர் தலைவர்களையும், பல அதிகாரிகளையும் சந்திப்பார் என தெரிய வருகிறது.

More articles

Latest article