டெல்லி: வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு அதை வழங்காமல் மறுக்கப்போகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: நாட்டில் நிலவி வரும் மிகபெரிய வேலைவாய்ப்பின்மை காரணமாக இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலைவாய்ப்பின்மை நாள் என்று அழைக்கின்றனர்.
வேலைவாய்ப்பு என்பது கவுரவம். ஆனால் இன்னும் எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது என்றும் பதிவிட்டுள்ளார். வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் குறித்து வெளியான அறிக்கையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel