டில்லி
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி தாம் மக்கள் தீர்ப்பை மதிப்பதாக கூறி உள்ளார்.
நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தலில் திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. மேலும் மேகாலயாவில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி காங்கிரசாக இருந்த போதிலும் அங்கு பிற கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி அரசு அமைக்க உள்ளது. இந்த முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை கருத்து தெரிவிக்கவில்லை என பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் தனது பாட்டியை ஆச்சரியப்படுத்த இத்தாலி நாட்டுக்கு ராகுல் சென்றுள்ளார். இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காத ராகுல் காந்தி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது பதிவில், “மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் அரசு மதிக்கிறது. வடகிழக்கு பகுதியில் நாங்கள் எங்கள் கட்சியின் பலத்தை அதிகரித்து விரைவில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம்” என தெரிவித்துள்ளார். அத்துடன் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.