மும்பை

ரும் மார்ச் 1 ஆம் தேதி மக்களவை தேர்தலில் தனது மகாராஷ்டிரா பரப்புரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.   இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் பரப்புரையை வரும் 20 ஆம் தேதி அன்று நாந்தேத் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் தொடங்குகிறது.

இதில் தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மற்றுமுள்ள கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.  இந்த கூட்டணிக்கு மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பரப்புரையை துலே நகரில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.   அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு பேரணி நடத்தப்பட உள்ளது.    இந்த பேரணியில் காங்கிரசுடன் தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் கலந்துக் கொள்ள உள்ளன.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ”இந்த பேரணியில் மாநிலம் முழுதும் இருந்து பல காங்கிரஸ் தொண்ட்ர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.    பேரணி நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்து முடிவு செய்ய துலே நகரில் வரும் 21 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. ” என தெரிவித்துள்ளார்.