டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: மற்ற நாடுகளுடன், பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்டியெழுப்பிய, வளர்த்த உறவுகளை அழித்துவிட்டார்.

நண்பர்கள் இல்லாத பகுதியில் வசிப்பது ஆபத்தானது என்றும் தமது பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடான வங்கதேசத்துடன் சீனா நெருங்கி நட்பு பாராட்டி வருகிறது என்ற ஆங்கில செய்தி ஒன்றையும் ராகுல் காந்தி மேற்கோள்காட்டி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel