டெல்லி

ன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று காலை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2 024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, செல்போன், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முக்கியமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்.

“சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்.

பிற மாநில நலன்களை ஒதுக்கிவிட்டு கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளை தாஜா செய்து மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது”

எனப் பதிவிட்டுள்ளார்.