டெல்லி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமெதி தொகுதி மக்கள் கொரோபனா பாதிப்பை தடுக்கும் வகையில், தேவையான , டுப்பு உபகரணங்களான முகக்கவசம், சானிடைசர், சோப் போன்ற பொருட்களை அனுப்பி உள்ளார்.

அமேதி தொகுதியில் பணியாற்றி வரும்  12,000 துப்புரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், 20,000 முகமூடிகள் மற்றும் 10,000 சோப்புகளை அனுப்பியுள்ளதாக கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய  காங்கிரசின் அமேதி மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கூறுகையில், இந்த பொருட்களை குறிப்பாக கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கு வழங்க காந்தி அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே அமேதி மக்களுக்கு தேவையான கோதுமை மற்றும் அரிசி மூட்கைளை அனுப்பிய ராகுல் காந்தி, தற்போது மக்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு பொருட்களை அனுப்பி உள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம், தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களுக்கும் தேவையான கொரோனா நிவாரண பொருட்களை ராகுல்காந்தி அனுப்பியிருந்தார். தற்போது அமேதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி உள்ளார்.

ராகுல்காந்தி கடந்த 1999 முதல் அமேதி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால், கடந்த பொதுத்தேர்தலில், அந்த தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்த நிலையில்,  கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து வெற்றிபெற்று  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.