துஹ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வெறுப்பை பரப்புவதாக கூறியுள்ளார்.

வருகிற 5 ஆம் தேதி 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பா.ஜ.க. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகல் தனித்தனியே போட்டியிடுகின்றன்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அரியானாவின் நுஹ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசிய போது,

”நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன. அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.

நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள். அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்துவிட்டது. பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.”

என்று தெரிவித்துள்ளார்.