மணிப்பூர்
பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி. ஒரு ஆண்டிற்கும் மேலாக அங்கு பிரச்னை இருந்து வருகிறது. பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. நேற்று மூன்றம் முறையாக ராகுல்காந்தி மணிப்பூருக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்,
”மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும். மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு வருகை தந்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என நாடு விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வர வேண்டியது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இங்கு வந்து மக்களின் குரலைக் கேட்டு அவர்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மணிப்பூரில் பிரச்னை ஏற்படவில்லையென்றாலும் பிரதமர் இங்கு வந்திருக்க வேண்டும். ஆனால், மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி மக்களின் வலிகளைக் கேட்க வேண்டும். மணிப்பூர் சூழலை மேம்படுத்த எந்த உதவியையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது”
என்று கூறியுள்ளார்.