சூரன்கோட்

ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்ம்மீரில் உள்ள சூரன்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி,

”ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். மட்டுமே வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான்.

வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். ஆளுங்கட்சியினர் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள்; அதற்கு எதிராக நாம் வலுவாக நிற்கும்போது சட்டம் நிறைவேற்றப்படாமல் புதிய சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் முதன்மையான கோரிக்கை”

என்று உரையாற்றி உள்ளார்J