டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.
பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் கருத்து பதிவிட்டதிலிருந்தே, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தற்போதைய தேர்தலுக்கு முன்னரே வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருந்தது. இன்று மீண்டும் மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில்,
“நாட்டில் ஜனநாயக துறைகள் கைப்பற்றப்படும்போது, வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது தற்போது ஒரு கருப்புப் பெட்டியாக உள்ளது. தேர்தல் ஆணையம், அந்த இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்”
எனப் பதிவிட்டுள்ளார்.