புவனேஸ்வர்
புவனேஸ்வர் விமான நிலையத்தில் படியில் இருந்து தவறி தலை குப்புற விழுந்த புகைப்படக்காரருக்கு ராகுல் காந்தி ஓடிச் சென்று உதவி செய்துள்ளார்.

வரப்போகும் மக்களவை தேர்தலி ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஒரிசா மாநிலம் சென்றுள்ளார். அவரை புவனேச்வர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் சூழ்ந்துக் கொண்டுள்ளனர்.
அப்போது புகைப்படம் எடுத்த படி பின்னால் சென்ற ஒரு புகைப்படக் கலைஞர் படியில் இருந்து தவறி தலைகுப்புற கீழே விழுந்தார். அவருடைய தலை தரையில் மோதி உள்ளது. இதைக் கண்டு பதறிப் போன ராகுல் காந்தி அங்கு உடனடியாக ஓடிச் சென்றுள்ளார்.
புகைப்படக் கலைஞரை கையை பிடித்து ராகுல் காந்தி துக்கி விட்டுள்ளார். இந்த நிகழ்வை ஒரு காங்கிரஸ் தொண்டர் வீடியோ படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் அதே பதிவில் மோடி ஒரு கூட்டத்தில் பேசும்போது கீழே விழுந்தவர்ருக்கு உதவாமல் உரையை தொடர்ந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
நன்றி : ஹெசிபாவின் டிவிட்டர்
[youtube-feed feed=1]Here's the video of PM Modi I was speaking of, in case you haven't seen it. pic.twitter.com/yAXMqNlczb
— Hasiba | حسيبة | हसीबा ✋🏽🌈🍉 (@HasibaAmin) January 25, 2019