புதுடெல்லி

க்கள் வாக்களிக்கும் முன்பு சிந்தித்துப் புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என ராகுல் காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக மும்முரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட ந்திர்க்கடைகல் இணைந்து மத்தியில் ஆளும் பாஜக வை வீழ்த்த கூட்டணி அமைத்துத் தேர்தலில் களம் இறங்கி  உள்ளன.  அனைத்துக் கட்சித் தலைவர்களும்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில்,

“தற்போது இந்தியா மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்? சீரழித்தவர்கள் யார்? என்பதைச் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் கோடீசுவரர், தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ரூ.400, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற உத்தரவாதங்களைக் காங்கிரசும், இந்தியா கூட்டணியும் வழங்கி உள்ளன. 

அதேநேரம் பா.ஜனதாவோ, வேலையில்லாத் திண்டாட்டம் உறுதி, விவசாயிகளுக்குக் கடன் சுமை, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அற்ற பெண்கள், உதவியற்ற தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் பாகுபாடு மற்றும் சுரண்டல், சர்வாதிகாரம், போலி ஜனநாயகம் போன்றவற்றைத்தான் அர்த்தப்படுத்துகிறது. 

நாட்டின் குடிமக்களாகிய உங்களது எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து புரிந்து கொண்டு பிறகு சரியான முடிவை எடுங்கள்” 

என்று பதிவிட்டுள்ளார்.