வயநாடு:
எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார்.

அவரது இந்த பயணத்தின் போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்ற திட்டமிட்டு உள்ளார்.
மோடி பெயர் குறித்தான அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதன் எதிரொலியாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவது ம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]