திருவனந்தபுரம்:
கேரளாவில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் புதிதாக 1,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நிலைமை கட்டுப்படுத்த நேற்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜெரோஜ் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

இதில், பொதுமக்களை எச்சரித்த கேரள சுகாதார அமைச்சர், வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.