டெல்லி: ”பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா?” என ராகுல்காந்தியுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், தற்போது அந்த டிவிட்டை நீக்கி உள்ளார். அது தொடர்பாகவும் டிவிட் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் எழுதிய கடிதம் குறித்து இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, கடிதம் கொடுத்த மூத்த தலைவர்கள் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கடிதம் (கட்சித் தலைமை மேல்) ஏன் அனுப்பப்பட்டது என்று கேள்வி எழுப்பிய ராகுல், சீர்திருத்தங்களுக்காக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியது, பாஜகவுடன் இணைந்து செய்யப்பட்ட நடவடிக்கை என்றும், கட்சியின் சகாக்கள் எழுதிய கடிதத்தின் நேரத்தை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
ராகுல் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர். இது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தனர். ராகுலின் குற்றச்சாட்டை மூத்த தலைவர் குலாம்நபி ஆசாம் உள்பட பலர் மறுத்தனர்.
இந்த நிலையில், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தவர்களில் ஒருவரான கபில்சிபல், தனது டிவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்திக்கு பதில் அளித்திருந்தார்.
அதில், ”நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என ராகுல் காந்தி கூறுகிறார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதால் அங்கு காங்கிரஸ் கட்சியை பாதுகாத்தது.
மணிப்பூரில் பாஜக அரசை வீழ்த்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்தது.
30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாதது.
நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்டுகிறோமா?”
என கபில்சிபல் கேள்வி எழுப்பியிருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தான் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வில்லை, தான்தான் காரணம் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. எனவே எனது முந்தைய டிவுட்டை திரும்ப பெறுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.