அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தனது சகோதரி பிரியங்கா காந்தின் தோளில் கைபோட்டு செல்லமாக விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…
பொதுவாக தமிழகத்தில் பாசத்துக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுவது சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் திரைப்படம்தான். அண்ணன்-தங்கை பாசத்தை இந்த திரைப்படத்தில் சிவாஜியும், சாவித்திரியும் அனாயசயாக நடித்திருப்பார்கள்…
ஆனால், இன்றைய ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லமாக கொஞ்சி விளையாடியது பாசமலர் திரைப்படத்தையும் மிஞ்சியது என்றால் மிகையல்ல…
பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையே கான்பூரில் பிரசாரத்துக்காக விமானத்தில் வந்தபோது, தனது சகோதரி பிரியங்கா காந்தியை விமான நிலையத்தில் சந்தித்தார் ராகுல்காந்தி, அப்போது, ராகுல்காந்தி பிரியங்காவின் தோளில் கைபோட்டு செல்லமாக விளையாடி நிகழ்வு வைரலாகி வருகிறது…