டெல்லி: மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவர்களின் நினைவிடங்களில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செய்தார்.
மகாத்மாகாந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டுல் ஜனாதிபதி திரௌபதி முர்மு. துணை குடியரசு தலைவர் தங்க, பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்தனர்.
இந்த நிலையில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி, புதுதில்லியின் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, விஜய்காட்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். சாஸ்திரி மகாத்மாவின் பிறந்தநாளைப் பகிர்ந்து கொண்டார்.
தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தார்.
महात्मा गांधी जी की जयंती पर नेता विपक्ष श्री @RahulGandhi ने राजघाट स्थित बापू की समाधि पर पुष्प अर्पित कर श्रद्धांजलि दी। pic.twitter.com/944GHuqrtz
— Congress (@INCIndia) October 2, 2024
पूर्व प्रधानमंत्री श्री लाल बहादुर शास्त्री जी की जयंती पर नेता विपक्ष श्री @RahulGandhi ने विजय घाट पर उन्हें पुष्प अर्पित कर श्रद्धांजलि दी। pic.twitter.com/siUwNbRqY1
— Congress (@INCIndia) October 2, 2024