டெல்லி: ராமாயணம் இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு  தலைநகர் டெல்லியில் வால்மிகி கோவிலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில் மறைந்த மகாத்மா  காந்தியடிகள் 200 நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித வால்மீகி இந்து இதிகாசமான ராமாயணத்தின் ஆசிரியர் மற்றும் குறிப்பாக தலித்துகள் மத்தியில் ஒரு மரியாதைக்குரிய நபர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ராகுல்காந்தி அவரது கோவிலுக்கு சென்று வணங்கினார்.

 பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் பார்வையிட்டார். அதிலும் காந்தியடிகள் 200 நாட்களுக்கு மேல் தங்கிய ஓர் அறைஅந்த கோயிலில் உள்ளது. அங்குகாந்தியடிகளின் பலவிதமானபுகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  வெளிவந்துள்ளன.

இதுகுறித்து ராகுல் தனது முகநூல் பக்கத்தில்  இந்தியில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், திரு காந்தி மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளில் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள் ளார். மேலும்,  “இன்று காலை, இந்த புனிதமான நேரத்தில், நான் டெல்லியில் உள்ள வால்மீகி கோவிலுக்குச் சென்றேன். மகாத்மா காந்தி இந்த வளாகத்தில் வால்மீகி சமூகத்தினருடன் நிறைய நேரம் செலவிட்டார். நான் பாபு நிவாஸில் சிறிது காலம் தங்கியிருந்து உத்வேகம் பெற்றேன்,”

உண்மை, நீதி மற்றும் அன்பும் கருணையும் நிறைந்த ஒற்றுமை பாதையை மனிதக்குலத்துக்கு எடுத்துக்காட்டிய மகரிஷி வால்மீகிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.