டில்லி:
3 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, காங்கிரஸ் ஒரு சுத்தமான சிலேட்டாக உள்ளது, புதிய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் புதிய காங்கிரஸ் கட்சியை உங்கள் முன் வைப்போம் என்று கூறினார்.
சிங்கப்பூர் சென்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்,அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங், மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோரை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடினார்.
அதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்திய தலைமை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை குறித்து அவர்களுடன் ஆலோசனை செய்த ராகுல்எ தொடர்ந்து அவர்களிடையே பேசியதாவது,
கடந்த 2012-ல் பெரிய புயல் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். இதனால், 2012 முதல் 2014 வரை கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலைந்தது. பல பின்விளைவுகள் சந்தித்தோம்.
தற்போது காங்கிரஸ் இப்போது ஒரு சுத்தமான சிலேட்டாக உள்ளது, புதிய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் புதிய காங்கிரஸ் கட்சியை உங்கள் முன் வைப்போம் என்றார்.
இந்தியாவில் கிராமப்புற மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். நமக்கு ஏராளமான சவால்கள் உள்ளன. அமைதியான முறையில், அனைவரையும் ஒருங்கிணைக்க கூடிய மாற்றத்தையே நாம் விரும்புகிறோம். சமுதாயத்தில் அனைத்தும் சம அளவில் வைக்கப்பட வேண்டும். ஆனால், அமைதி குறித்து பா.ஜ., கவலைப்படவில்லை. சமுதாயத்தை பிரிப்பதாலும் அவர்களிடமிருந்து வரும் கடுமையான ஆபத்துக்களை நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் லீ குவான் யூ பள்ளியில் உரையாற்ற உள்ளார். பின்னர், 47 வயதான காங்கிரஸ் தலைவரும் சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனுடனும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்த நாளை (மார்ச் 9 ம் தேதி) சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹிசென் லியோங்- சந்தித்து பேசுகிறார்.
அதையடுத்து வரும்10ந்தேதி சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியா பயணமாக உள்ளார். அங்கு மலேசிய பிரதம மந்திரி நஜிப் ரசாக்-ஐ சந்தித்து பேசுகிறார்.