டில்லி

ன்று மதியம் டில்லியில் விபத்துக்குள்ளான பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ் என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில பத்திரிகை ஒன்றின் உரிமையாளரான பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ். இவர் டில்லி நகரில் உள்ள ஹுமாயூன் சாலையில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் இவருக்கு நெற்றியில் அடிபட்டு இரத்த காயம் உண்டானது. அந்த பக்கமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுக் கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸை கண்ட ராகுல் காந்தி அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது காரில் ராகுல் காந்தியின் பணியாளர் இந்த சம்பவத்தை வீடியோ படமாக்கி உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வியாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தி காரில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் அடிபட்டவரின் நெற்றியில் அழுத்தி துடைக்கிறார். அப்போது அந்த பத்திரிகையாளர், “ஐயா இன்னொரு முறை கைக்குட்டையால் அழுத்துங்கள். நான் அதை வீடியோ எடுத்து என் பணிக்கு பயன் படுத்துவேன்” என கூறுகிறார். அதைக் கேட்ட ராகுல் சிரிக்கிறார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகிறது.