டெல்லி

பாஜக எம் பி க்கள் தங்களை தடுத்து தள்ளி விட்டதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டடு பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டது.

பாஜக எம் பி சாரங்கி செய்தியாளர்களிடம்

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன். நான் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்தேன். அப்போது வந்த ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார்”0

எனக் கூறியுள்ள்ளார்

பாஜக எம் பி சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ராகுல் காந்தி இதுபற்றி,

“இது உங்கள் கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் நாடாளுமன்ற நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்றேன். ஆனால், பா.ஜ.க. எம்.பி.க்கள் என்னை தடுத்து நிறுத்த முயன்றனர். என்னை தள்ளி விட்டு, அச்சுறுத்தலும் ஏற்படுத்தினர். இதுவே நடந்தது. ஆம், மல்லிகார்ஜுன கார்கேவும் தள்ளி விடப்பட்டார் 

அவர்கள் எங்களை நெருக்கி தள்ளியதில் நாங்கள் பாதிக்கப்படவில்லை.  ஆனால், இதுவே நுழைவாயில். இந்த வழியேதான் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும். அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளார். நாங்கள் உள்ளே செல்ல விடாமல் பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்”

எனச் செய்தியாளர்களிடம்  விளக்கம் அளித்துள்ளார்.