டெல்லி மாநகர சாலையில் நேற்று மாலை ராகுல் காந்தியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சிக்கிக் கொண்ட ராகுல் காந்தி தனது அருகில் சென்ற காரில் இருந்தவருடன் நலம் விசாரித்தார்.

https://twitter.com/prop4u_rajeev/status/1498144114084581378

இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்த நபர் டெல்லி சாலையில் இந்த வித பாதுகாப்பும் இன்றி காரை தாமாக ராகுல் காந்தி ஒட்டிச் சென்றது தனக்கு ஆச்சரியமளித்ததாக பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி குறித்த இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி அவ்வப்போது இதுபோல் கார் ஒட்டிச் செல்வது வழக்கமான ஒன்று, இதற்கு முன் ஓரிரு முறை தனது தாயார் சோனியா காந்தியுடன் இதுபோல் கார் ஒட்டி சென்றுள்ளார்.