டில்லி:
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டியை ராகுல் காந்தி கலைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 34 பேர் கொண்ட நிலைக்குழுவை அவர் அமைத்துள்ளார்.
இந்த குழு எதிர்வரும் நாடாளுமன்ற முழுமையான அமர்வுக்கான பணிகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற முழுமையான அமர்வை எதிர்கொள்வது குறித்து முடிவு செய்ய நிலைக்குழு நாளை (17ம் தேதி) கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி கடந்த டிசம்பர் 11ம் தேதி தேர்வு செய்யப்பட்டதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவுள்ளனர்.
இந்த நிலைக்குழுவில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்கள் பி.எல்.புனியா, ஆர்பிஎன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிரந்தர அழைப்பாளர்களான பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், விலாஸ் முட்டென்வார், தவான், சிவாஜி ராவ், ராஜசேகரன், மோக்சினா கித்வாய் போன்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.