டெ.ல்லி
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கிலம் குறித்த பேச்சை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ”மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்” (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
அப்போது அமித்ஷா,
“அன்னிய மொழிகளால் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனெனில், ஒருவரின் வரலாறு, கலாசாரம் மற்றும் மதத்தை அன்னிய மொழியில் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை.”
எனக் கூறினார்.
இதற்கு ராகுல் காந்தி,
“இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல அதிகாரம், ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி. ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை”
என விமர்சித்துள்ளார்.