சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

கேரளத்தின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வயநாட்டில் காலை 10மணி நிலவரப்படி, ராகுல் காந்தி 1,03,790 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா 39,733 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார். மூன்றாவதாக பாஜக வேட்பாளர் சுரேந்திரன் 23,278 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதுபோல, ரேபரேலியில் ராகுல் காந்தி 38,761 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 20,281 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.
Patrikai.com official YouTube Channel