டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து பேரணியாக ராகுல்காந்தி தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். ராகுல்காந்தி அமலாக்க்ததுறையின் விசாரணைக்கு ஆஜரானார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வாங்கியதில்,நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்பட சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க ஜூன் 2-ஆம் தேதி ராகுல் காந்தியையும், ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தியையும் ஆஜராகுமாறு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. எனினும் தான் வெளிநாட்டில் இருப்பதால் வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார். அதன் அடிப்படையில், ஜூன் 13ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.
விசாரணைக்காக அமலாக்கத்துறைராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை எதிர்த்து, டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி சென்றனர். இந்த ஊர்வலத்தில் பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பல பலரும் கலந்துகொண்டனர். பேரணியாக சென்றவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி மட்டும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில்இ ராகுல் காந்தியுடன் பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.